‘பெத்தி’ படத்திற்குப் பிறகு மணிக்கட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள அவர், அடுத்ததாக ‘புஷ்பா’ படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சுகுமாருடன் இணைகிறார்.
RC17 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தில் ராம் சரண் ஏற்கவிருக்கும் கதாபாத்திரத்துக்கு உடல் எடையில் மாற்றம் தேவைப்படுகிறதாம். இதற்காக சுமார் 8 கிலோவாவது எடையைக் குறைக்க வேண்டும் என சுகுமார் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை முழுமையாக சீராகும் வரை காத்திருந்த ராம் சரண், தற்போது அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய பிரத்யேக டயட் மற்றும் உடற்பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார்.
படத்தின் அடுத்தகட்ட வேலைகளும் வேகமெடுத்துள்ளன. திரைக்கதையை முழுமையாகத் தயாரித்துள்ள சுகுமார், படப்பிடிப்பை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தற்போது கவனித்து வருகிறார். இதன்படி RC17 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கதாநாயகி தேர்வைப் பொறுத்தவரை சாரா அர்ஜுன், ருக்மிணி வசந்த் உள்ளிட்ட சில நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
—
