சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் இயக்கியுள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியைச் சுற்றியே முக்கியமான சம்பவங்கள் நகரும் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வெளியீட்டுக்கு முன்பாக படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றன. ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ ஆகிய பாடல்கள் வெளியான நிலையில், இதில் ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் சூரி ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ‘மண்டாடி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி ரசிகர்களை சந்திக்க உள்ளது.
—
