தீபாவளிக்கு ‘அரசன்’ ஸ்பெஷல் புரோமோ? – ரசிகர்கள் உற்சாகம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தைப் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ‘அரசன்’ படத்தின் சிறப்பு புரோமோவை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் காட்சிகளுடன் பிரத்யேகமாகப் படமாக்கப்பட்ட காட்சிகளும் இதில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading