‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’. இப்படத்தில் அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் முதல் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

இப்படம் குறித்து இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் கூறுகையில், காதலும் நகைச்சுவையும் நிறைந்த கதையாக இது உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். பாக்யராஜ் படங்களைப் போன்ற திரைப்படங்கள் தற்போது வருவதில்லை என்ற ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்றும், ஜோடிப் பொருத்தத்தை மையமாகக் கொண்ட இந்தக் கலகலப்பான கதையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அன்னா பென்னுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading