நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போதைய நிலையை நேரடியாக பார்வையிட்டு வரும் அவர், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்திய அரசின் பணிகளையும் பாராட்டியுள்ளார்.
நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய சோனு சூட், இந்திய அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், களத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கும்போது நிலைமை சீராக நீண்ட காலம் தேவைப்படும் என்பது தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் இதுதான் என்றும் அவர் வலியுறுத்தினார். “இப்போது நாம் அவர்களுக்கு துணை நிற்கவில்லை என்றால், வேறு எப்போது உதவுவது?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். மேலும், பெரிய நிறுவனங்கள் தங்களது CSR நிதியின் மூலம் நிவாரணப் பணிகளுக்கு பங்களிக்க முன்வர வேண்டும் என்றும் சோனு சூட் கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து, தனது ‘சூட் சேரிட்டி பவுண்டேஷன்’ மூலமாகவும் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான எந்தவிதமான உதவியாக இருந்தாலும் தங்களது அமைப்பு மூலம் செய்ய தயாராக இருப்பதாக சோனு சூட் உறுதியளித்துள்ளார்.
