“தமிழ் சினிமா எனக்கு மிகவும் நெருக்கமானது” -பஹத் பாசில் டாக்!

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை நடிகர் பஹத் பாசில் தயாரித்துள்ளார். இப்படம் குறித்து பேசிய அவர், திலீஷ் மற்றும் ஷியாமுடன் இணைந்து 2018-ம் ஆண்டு தயாரிப்பு பயணத்தை தொடங்கியதாகவும், தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் எட்டாவது படமாக இது உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த மற்றும் சிறப்பானதாக தோன்றும் கதைகளையே தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படம் என குறிப்பிட்ட பஹத் பாசில், இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் கிரீஷ் ஏ.டி. மற்றும் தனது படக்குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்தார். உலகம் முழுவதும் படத்தின் மலையாள பதிப்புக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், தமிழ் ரசிகர்களும் நல்ல சினிமாவை எப்போதும் ஆதரித்து வருவதால் இந்தப் படத்தையும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மொழியும் தமிழ் சினிமாவும் தனக்கு மிகவும் நெருக்கமானவை என பஹத் தெரிவித்துள்ளார். அவரது தந்தை பாசில் தமிழில் பணியாற்றி பல சிறந்த திரைப்படங்களை உருவாக்கியிருப்பதே அதற்கான முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் தமிழ்நாட்டுடனும் தமிழ் சினிமாவுடனும் தனக்கு இருக்கும் தொடர்பு தனிப்பட்ட முறையில் மிகவும் சிறப்பானது என்றும் பஹத் பாசில் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading