கடல் சார்ந்த சாகசக் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில் இடம்பெற்ற பிரம்மாண்டமான காட்சிகள், அதிரடியான சண்டைக் காட்சிகள் மற்றும் கரடுமுரடான கடற்கரை பின்னணி ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்தத் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ள சுஹாஸ், தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ‘மண்டாடி’ படத்தில் அவர் ‘புலி’ என்ற பெயருடைய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுஹாஸ், “சூரிக்கு எதிராக மோதும் சக்திவாய்ந்த வில்லன் வேடத்தில் நடித்துள்ளேன். எங்கள் இருவருக்கும் இடையேயான மோதல் மற்றும் போட்டி தொடர்பான காட்சிகள் படத்தின் முக்கியமான ஹைலைட்டாக இருக்கும். இந்தப் படம் எனது திரைப்பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.
—
