விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படப்பிடிப்பு நிறைவு!

விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகநாத் இயக்கி வரும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், ஐந்து மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் தபு, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ், கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் இடம்பெற்ற அதிரடி காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ள பின்னணி இசைக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ளதால், அடுத்தகட்டப் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading