“மாற்றத்தை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்” – நடிகை ரேவதி அட்வைஸ்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் பாரத் சோகா கக்காய் (BSG) அமைப்பின் 6-வது மகளிர் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ரேவதி கலந்துகொண்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமூக மாற்றம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். மற்றவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதைவிட, ஒவ்வொரு பெண்ணும் தன்னிடமிருந்து மாற்றத்தை உருவாக்கத் தொடங்கினால் சிறந்த சமூகத்தை கட்டமைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பு என்பது அவர்களை மட்டும் சார்ந்த விஷயம் அல்ல என்றும், பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துவதோடு ஆண் குழந்தைகளையும் பொறுப்புணர்வுடன் வளர்ப்பது அவசியம் என்றும் ரேவதி சுட்டிக்காட்டினார். சிறு வயதிலேயே நல்ல மதிப்புகளையும் பெண்களை மதிக்கும் எண்ணத்தையும் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

வெறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல், அதை நடைமுறை செயல்பாடுகளாக மாற்ற வேண்டும் என்றும் ரேவதி வலியுறுத்தினார். மேலும், பெண்கள் தங்களுக்குள் இருக்கும் திறன் மற்றும் சுய ஆற்றலை அடையாளம் கண்டு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை தன்னம்பிக்கையுடன் சமாளிக்கும் மனதை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading