தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கும் தனது 111-வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் பணிகள் முடிந்ததும் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய அதிரடி திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சில காலமாக இந்தப் படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. ஆனால், அந்தச் செய்திகளை தயாரிப்பு தரப்பு மறுத்து, திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட பணிகளில் இயக்குநர் கொரட்டலா சிவா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், பாலகிருஷ்ணாவுக்கு எதிராக முக்கியமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க நடிகர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக வெங்கடேஷ் நடிப்பில் 2024-ல் வெளியான ‘சைந்தவ்’ திரைப்படத்திலும் ஆர்யா முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
—
