நடிகர் கவின் சமீபத்திய பேட்டி ஒன்றில், நிஜ வாழ்க்கையில் நான் சிகரெட் புகைக்கவோ, மது அருந்தவோ மாட்டேன். முடிந்த அளவுக்கு இதுபோன்ற காட்சிகளை சினிமாவிலும் தவிர்க்க வேண்டும் என்றே முயற்சி செய்து வருகிறேன். ஒரு படத்தின் கதைக்கும், குறிப்பிட்ட காட்சிக்கும் அது மிகவும் அவசியமாக இருந்தால் மட்டுமே அத்தகைய காட்சிகளில் நடிக்கிறேன். நம்மால் முடிந்தவரை இந்த சமூகத்திற்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பதே முக்கியம் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Add a Comment
