‘பாரதி கண்ணம்மா’, ‘மகாநதி’ உள்ளிட்ட வெற்றிகரமான சீரியல்களை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவான வெப் தொடர் ‘ரிசார்ட்’. ‘எருமை சாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் தொடரில், தலைவாசல் விஜய் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி அமர், சுனிதா, அபிநயா நேத்ரன், தர்ஷனா பால், சாய் தன்யா, படவா கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த ‘ரிசார்ட்’, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 100 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.
Add a Comment
