பிரபல நகைக்கடை நிறுவனம் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கிருத்தி சனோன் நடித்த விளம்பரப் படத்தை வெளியிட்டது. அதில், அவர் அணிந்திருந்த ஆடை பண்டிகையின் கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் இல்லை என்றும், கழுத்துப் பகுதி மிகவும் திறந்த நிலையில் இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், கிருத்தி சனோன் தனது செல்ல நாய்க்கு ராக்கி கட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. பாரம்பரிய பண்டிகையையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் வகையில் விளம்பரம் இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த விளம்பர வீடியோ நீக்கப்பட்டுள்ளது.
Add a Comment
