பொன் ராம் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியான கொம்பு சீவி படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். சண்முக பாண்டியனும் ஒவ்வொரு ஊரின் திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக மக்களிடம் விமர்சனங்கள் கேட்டு வருகிறார்.கிராமத்து கதைக்களத்தின் பின்னணியில் தயாராகியுள்ள இப்படம் நல்ல வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. இதுவரை இப்படம் 1.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

