சல்மான் கான் – நயன்தாரா கூட்டணியில் ‘மான்ஸ்டர்’… 2027 பக்ரீதுக்கு ரிலீஸ்?

சல்மான் கானின் அடுத்த படத்தைச் சுற்றிய எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தில் ராஜூ தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு ‘மான்ஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படம் பான் இந்தியா அளவில் உருவாகவுள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சல்மான் கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணையும் இந்தக் கூட்டணியே படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தை 2027ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சல்மான் கானின் பான் இந்தியா மார்க்கெட்டுடன் நயன்தாராவின் நட்சத்திர அந்தஸ்தும் இணைவதால், அடுத்த ஆண்டு பக்ரீத் வெளியீடுகளில் முக்கியமான படமாக ‘மான்ஸ்டர்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே சல்மான் கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்த உள்ளார். வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தி ‘பிக் பாஸ் 20’ நிகழ்ச்சியை வழக்கம்போல் அவர் தொகுத்து வழங்க இருக்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading