டாப்ஸியின் ‘காந்தாரி’… செப்டம்பர் 3ல் நெட்பிளிக்ஸில் ரிலீஸ்!

தென்னிந்திய திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி பன்னு. தமிழில் ‘ஆடுகளம்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’, ‘கேம் ஓவர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அனுராக் கஷ்யப் இயக்கிய ‘டோபாரா’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆசி’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

நடிப்பைத் தாண்டி படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் டாப்ஸி, தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் கனிகா திலோன் எழுதிய ‘காந்தாரி’ படத்தை தேவாஷிஷ் மகிஜா இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து, வரும் செப்டம்பர் 3ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தாரி படத்தின் அனுபவம் குறித்து முன்பே பதிவிட்டிருந்த டாப்ஸி, “சூழ்நிலைகள் கடினமாகும்போது வலிமையானவர்கள் சவாலை எதிர்கொள்ள இன்னும் கடினமாக உழைப்பார்கள். இந்த ஒரு வரிதான் ‘காந்தாரி’ படத்தின் மூலம் எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தையும் உத்வேகத்தையும் பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading