‘இம்மோர்டல்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! வெளியீடு எப்போது?

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் இணைந்து நடித்துள்ள ஹாரர் ரொமான்ஸ் திரைப்படம் ‘இம்மோர்டல்’. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டை மையமாக வைத்து நகரும் ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தின் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. இதையடுத்து, இப்படத்தை ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால் சில காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில், ‘இம்மோர்டல்’ திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் படத்தின் அடுத்தகட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading