ரவி தேஜாவுக்கு ஜோடியாக ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகளில் பங்கேற்று வருகிறார்.நடிகர் தனுஷை தான் தொகுப்பாளராக இருந்த காலத்தில் பேட்டி எடுத்த அனுபவத்தை நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் தான் பேட்டி எடுத்த சமயத்தில், தனுஷ் மிகவும் சோர்வாக இருந்ததாகக் கூறிய பிரியா பவானி சங்கர், பேட்டியில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அவர் ஆக்ரோஷமானவர், சற்று முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
ஆனால், பின்னர் தனுஷின் பல்வேறு படங்களுக்கான புரமோஷன் பேட்டிகளைப் பார்க்கத் தொடங்கியபோது தனது பார்வை மாறியதாக பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். தொடர்ந்து பல பேட்டிகளை மேற்கொண்ட பிறகுதான், படங்களின் புரமோஷன் நேரத்தில் நடிகர்கள் எதிர்கொள்ளும் சூழல்களையும், அவர்களது மனநிலையையும் புரிந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் தனுஷையே நேரில் சந்தித்து, அந்தப் பழைய சம்பவத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியதாகவும் பிரியா பவானி சங்கர் குறிப்பிட்டுள்ளார். அப்போது, “நீங்கள் என்னிடம் அப்படி முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவே நினைத்தேன்” என்று அவரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
—
