அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் வர்த்திகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராம் இன் லீலா’. இப்படத்தில் பாலாஜி தியாகராஜன் தயாளன், முனிஷ்காந்த், சேத்தன், தீபா வெங்கட், மாளவிகா அவினாஷ், நயனா எல்சா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அங்கித் மேனன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆகஸ்ட் 21ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை ‘ராம் இன் லீலா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த திரைப்படம் தற்போது ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது.
