பிரபல நடிகை சமந்தா தற்போது சின்னத்திரையில் புதிய சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். சோனி லிவ் மற்றும் சோனி விழா தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ் ரசிகர்களுக்காக வித்தியாசமான வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ‘செலிபிரட்டி மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி குறித்து பேசிய சமந்தா, இந்த நிகழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை தான் செய்த நிகழ்ச்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Add a Comment
