சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ 2வது பாடல் வெளியீடு..!

நகைச்சுவை நடிகராகத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் சூரி. விடுதலை மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், அதன் பின்னர் கருடன், கொட்டுக்காளி, மாமன் போன்ற படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது அவர் நடித்து வரும் மிகப்பெரிய படங்களில் ஒன்று “மண்டாடி”. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படத்தை, ஆர்.எஸ். இன்போ நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கை, கடல் சார்ந்த உணர்வுகள் மற்றும் சமூகப் பின்னணியை மையமாகக் கொண்டு படம் உருவாகி வருகிறது.மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், தெலுங்கு நடிகர் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்சுத் குமார், சச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான “உசுரே நீதான் புள்ள” வெளியிடப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீ மதிமாறன் எழுதிய இந்தப் பாடலை கபில் கபிலன் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இணைந்து பாடியுள்ளனர்.காதலும், கிராமத்து உணர்வுகளும் கலந்து அமைந்துள்ள இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. சூரியின் இதுவரையிலான படங்களில் மிகவும் உயர்ந்த பட்ஜெட்டில் உருவாகும் படமாக மண்டாடி பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading