7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் டிபியை மாற்றிய பிரபாஸ்.. ரசிகர்கள் உற்சாகம்!

பான் இந்தியா நட்சத்திரமாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் பிரபாஸ், தற்போது “பௌசி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தின் பணிகளை முடித்தவுடன், இடைவேளையின்றி “ஸ்பிரிட்” படப்பிடிப்பிலும் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் அதிகம் செயல்படாதவராக இருந்தாலும், புதிய படங்களில் அறிமுகமாகும் கலைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து ஊக்கப்படுத்துவது பிரபாஸின் வழக்கமான பண்பாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரசிகர்கள் கவனித்த ஒரு முக்கியமான மாற்றம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனது டிஸ்ப்ளே புகைப்படத்தை (DP) பிரபாஸ் மாற்றியுள்ளார்.

புதிய டிபியாக அவர் வைத்திருப்பது, தனது வரவிருக்கும் “பௌசி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படமாகும். படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் இதை பெரிய அப்டேடாக பார்க்கின்றனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.ஹனு ராகவபுடி இயக்கும் இந்தப் படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading