“வெற்றிக் கொடி கட்டு முதல் வெற்றிக் கொடி நாட்டும் வரை” – முதல்வர் விஜய்க்கு இயக்குனர் பார்த்திபன் வாழ்த்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சராக விஜய் சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதனை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் தனித்துவமான மொழிநடையில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “வெற்றிக் கொடி கட்டு படத்தில் நடித்த நான், இன்று அரசியலில் வெற்றிக் கொடி நாட்டியவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய நேரம் வந்திருக்கிறது” என்று தொடங்கி, கவிதை மற்றும் உரைநடை கலந்த பாணியில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

குமரன் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகள் பெற்றுத்தந்த சுதந்திரக் கொடியை, முதல்வராக விஜய் முதன்முறையாக ஏற்றுவது பெருமையான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நினைவுகூர்ந்த அவர், அரசியலில் அனுபவம் இல்லாவிட்டாலும் மக்களுக்காக செயல்படலாம் என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு அளித்தவர் விஜய் என்றும் பாராட்டியுள்ளார்.

“பணம் இல்லாமல், மக்களின் நம்பிக்கையால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை அரசியல்வாதிகளுக்கே உணர்த்தியவர்” என்றும், அரசு ஊழியர்கள் நேர்த்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும் என்பதில் முன்மாதிரியாக இருப்பவர் என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தியதும், ஊழலைக் குறைக்கும் முயற்சிகளையும் குறிப்பிட்ட அவர், “இன்னும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்திய தகுதியுடன், ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரக் கொடியை ஏற்றுகிறார் நமது முதலமைச்சர்” என்று பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading