திரையுலகில் 51 ஆண்டுகள்.. ‘தர்மன்’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகி வருகிறது.

மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.சென்னையில் தற்போது ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் ரஜினிகாந்த் பங்கேற்கும் முக்கிய காட்சிகளும், பிரம்மாண்டமான பாடல் காட்சியும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திரையுலகில் ரஜினிகாந்த் 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி ‘தர்மன்’ படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் இணைந்து ரஜினிகாந்த் கேக் வெட்டி இந்த முக்கியமான மைல்கல்லை கொண்டாடியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading