“மகுடம்” மூலம் இயக்குநராக அறிமுகமான விஷால்.. 35 ஆண்டுகளாக இருந்த கனவு நிறைவேறியது என நெகிழ்ச்சி!

நடிகராக அறிமுகமாகும் முன்பே, இயக்குநர் அர்ஜூனுடன் இணைந்து சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் விஷாலுக்கு இருந்தது. தற்போது விஷால் இயக்கி நடித்துள்ள படம் மகுடம்.அஞ்சலி மற்றும் துஷாரா விஜயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விஷால் தனது சமூக வலைதளத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன். சவால்கள் அதிகரிக்கும்போது நான் இன்னும் வலிமையாக நிற்பேன். என்னை நான் நேராக கண்ணாடியில் பார்த்துக்கொள்ள முடியும் என்பதே எனக்கு பெரிய நம்பிக்கை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது ரசிகர்களை கடவுளுக்கு நிகராகக் கருதுவதாகவும், அவர்களுக்காக ஒரு நடிகனாகவும், படைப்பாளியாகவும் எந்த அளவிற்கும் செல்லத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.“35 ஆண்டுகளாக இருந்த என் கனவு இன்று நனவாகியுள்ளது. ‘மகுடம்’ மூலம் முதல்முறையாக இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன். என் பணியை முடித்துவிட்டேன்; இப்போது அதை உலகம் பார்க்க காத்திருக்கிறேன்” என்று விஷால் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading