விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘நூறு சாமி’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கணவனை இழந்த பெண்ணுக்கு அவரது மகன் மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதும், அதற்கிடையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. கடந்த வாரம் ஜீ5 OTT தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது, ‘நூறு சாமி’ திரைப்படம் OTT-யில் 10 கோடி நிமிட பார்வைகளை கடந்துள்ளதாக ஜீ5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
