ரன்பீர் கபூர், சாய்பல்லவி மற்றும் யஷ் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தை சர்வதேச அளவில் பிரமாண்டமாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். நிதேஷ் திவாரி இயக்கும் இந்த இதிகாசப் படம் வருகிற நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. படத்தின் சர்வதேச விநியோக உரிமையை ஹாலிவுட் நிறுவனமான சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது சீனா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் வெளியாகும் அதே தேதியில் இந்தியாவிலும் படத்தை வெளியிட முயற்சிகள் நடந்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
