தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லி விக்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த உயரிய விருதை வழங்கி அவரை கவுரவித்தார். நாடகம் மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
