நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “இந்த வயதிலும் நாடகத்தனமாக இருப்பது சங்கடத்தை தருகிறது. அமைதியை தேடுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். ஆகவே நல்லதை செய்யுங்கள், நல்லவராக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
Add a Comment
