“டேர் டெவில்” அஜித் படம் முற்றிலும் வேற மாதிரி இருக்கும் – இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அஜித் குமாரின் டேர் டெவில் படம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், “என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் அஜித் சார் ஒருவர். நான் சோர்வாக இருந்த காலத்தில் அவர் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அவருடன் வேலை செய்த அனுபவம் எனக்கு பெரிய ஊக்கமாக இருந்தது” என்றார்.

தற்போது தயாராகி வரும் டேர் டெவில் திரைப்படம், தனது முந்தைய படங்களின் பாணியைப் பின்பற்றாது என்றும், முழுக்க புதிய அனுபவத்தை தரும் வகையில் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய, பெரிய அளவிலான பொழுதுபோக்கு திரைப்படமாக அதை வடிவமைக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறினார். இந்தப் படம் அஜித்தின் அடுத்ததாக உருவாகவுள்ள புதிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. ஷாலினி தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading