மீண்டும் போலீஸ் கதையுடன் விருந்து கொடுக்க தயாரான இயக்குனர் ராம்கோபால் வர்மா!

ஆக்‌ஷன் திரைப்படங்களின் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்ற இயக்குநர் ராம்கோபால் வர்மா, புதிய படத்துடன் மீண்டும் கவனம் ஈர்க்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரது படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், தற்போது “போலீஸ் கம்பெனி” என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ஹர்ஷவர்தன் ராணே கதாநாயகனாக நடிக்கிறார். மும்பையின் முன்னாள் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் பணியில் அவர் எதிர்கொண்ட முக்கிய சம்பவங்கள், அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மும்பை குற்ற உலகத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் திரைக்கதையில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராம்கோபால் வர்மா மீண்டும் தீவிரமான போலீஸ் ஆக்‌ஷன் பாணிக்குத் திரும்புவது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading