துல்கர் சல்மான் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான “ஐ எம் கேம்” தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. “ஆர்டிஎக்ஸ்” படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதிர்ஷ்டத்தை வாழ்க்கையின் முக்கிய சக்தியாக நம்பும் ஒருவரின் பயணத்தையும், அவர் சந்திக்கும் எதிர்பாராத பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. துல்கர் சல்மான் மற்றும் ஜாம் வர்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு முன்னதாக படத்தின் முதல் பாடலான “அருகே அருகே” வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
