மீண்டும் மதுரையில் தொடங்கிய சிவகார்த்திகேயனின் “சேயோன்” 2ம் கட்ட படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “சேயோன்” திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. “தாய் கிழவி” படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதை வீடியோவுடன் ராஜ்கமல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading