தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை.. மோக்ஷா உற்சாகம்!

பெங்காலி நடிகை மோக்ஷா, தற்போது தமிழ் திரையுலகில் தொடர்ந்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தமிழில் அறிமுகமான படம் ‘கட்டா குஸ்தி 2’.

அந்தப் படத்தில் ‘மீனு மிஸ்’ என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மோக்ஷா, தனது தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். சமூக வலைதளங்களிலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டதால், தமிழில் அவருக்கு தனி ரசிகர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர்.

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ள அவர், தற்போது தமிழில் மேலும் பல வாய்ப்புகளை எதிர்நோக்கி வருகிறார். இதுகுறித்து பேசிய மோக்ஷா, “தமிழ் சினிமா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ‘கட்டா குஸ்தி 2’க்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார். மேலும், ஒரே மாதிரியான வேடங்களில் மட்டும் அல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply