“இது ஜோதிகாவின் நீண்ட நாள் ஆசை!” – 20வது திருமண நாள் கொண்டாட்டம் குறித்து சூர்யா

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ரசிகர்களின் கவனத்தை பெற்ற தம்பதியாக இருக்கும் சூர்யா – ஜோதிகா, தங்களது 20வது திருமண ஆண்டை சமீபத்தில் நிறைவு செய்துள்ளனர். 20வது திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் வெளிநாட்டில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கியவர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யாவிடம், 20வது திருமண ஆண்டு கொண்டாட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்பது ஜோதிகாவின் நீண்ட நாள் விருப்பம் என்று தெரிவித்தார்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலரும் ஒன்றாக கலந்து கொண்ட அந்த நிகழ்வு மிகவும் அழகான தருணமாக அமைந்ததாக சூர்யா கூறினார். அதேபோல், இத்தனை ஆண்டுகளாக தங்களது திருமண வாழ்க்கைக்கு ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி தெரிவித்தார்.இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த கொண்டாட்டத்தை மேற்கொண்டதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading