என் 35வது பிறந்தநாளை அமைதியாக கொண்டாடினேன்- நடிகை ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர், “இந்த பிறந்தநாள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அமைதியாகவும், மனசுக்கு நிம்மதியாகவும், நிறைய நன்றியுடனும் இருந்தது. குடும்பம், நெருங்கிய நண்பர்கள் மற்றும் மனசுக்கு பிடித்த சிலருடன் இந்த நாளை சந்தோஷமாக கழித்தேன். சின்ன சின்ன தருணங்களை ரசித்து, மனசுக்கு நெருக்கமான இடங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களை பெற்றேன். வாழ்க்கை எனக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ஒவ்வொரு அனுபவத்திற்கும், தொடர்ந்து என்னை சுற்றி இருக்கும் அன்பிற்கும் நன்றி. மற்றொரு அழகான வருடத்துக்குள் அடியெடுத்து வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading