கார்த்தி – மோகன் ராஜாவின் புதிய படத்தில் இணையும் த்ரிஷா?

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த புதிய தகவல் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் அவருக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி – திரிஷா கூட்டணி ஏற்கனவே “பொன்னியின் செல்வன்” படங்களில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால், இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கார்த்தி “சர்தார் 2” மற்றும் “மார்ஷல்” படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதனுடன், மோகன் ராஜா இயக்கும் இந்த புதிய படத்திற்கும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading