அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள “டி.சி” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வாமிகா கபி நாயகியாகவும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது எக்ஸ் (Twitter) பதிவில் வித்தியாசமான பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில், “Director & Commercial Hero Lokesh Kanagaraj” என்று குறிப்பிட்டு, லோகேஷின் திரை இருப்பை சுனாமி, சூறாவளி, அக்னி, இடியுடன் கூடிய மழை போன்ற இயற்கை சக்திகளுடன் ஒப்பிட்டார்.
மேலும், “ஏற்கனவே வெற்றிகரமான வர்த்தக இயக்குநராக இருக்கும் லோகேஷ், இனி அதிக சம்பளம் பெறும் ஆக்ஷன் ஹீரோவாகவும் ரசிகர்களை ஆளப் போகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். வாமிகா கபியின் திரை தோற்றத்தையும் அவர் பாராட்டியுள்ளார். அதேபோல், அருண் மாதேஸ்வரனின் திரைக்கதை கையாளும் விதமும், படத்தை உருவாக்கிய விதமும் தன்னுக்கு எப்போதும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இறுதியில், “Anirudh = DCR Super” என்று குறிப்பிட்டு, DCR என்பதை “Daily Collection Reports” என நகைச்சுவையாக விளக்கியுள்ளார். பார்த்திபனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
