கிரிக்கெட் ஜெய்ஸ்வாலுடன் காதல் வதந்தி.. மிருணாள் தாக்கூர் கொடுத்த பதில் வைரல்!

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு கஃபேவில் நடிகை மிருணாள் தாக்குர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலில் இருப்பதாக பல்வேறு வதந்திகள் கிளம்பின.

இந்த விவகாரம் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவொன்றில் ரசிகர்கள் கருத்து பகிர்ந்த நிலையில், மிருணாள் தாக்குர் நேரடியாக பதிலளித்தார். அவர் கூறியதாவது: “கொஞ்சம் நிதானமாக இருங்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம் என்பதை யார் உறுதி செய்தார்கள்? படித்தவர்கள் கூட இப்படி எளிதில் வதந்திகளை நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

மேலும், “நாட்டில் பேச வேண்டிய முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வெறும் பார்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வதந்திகளை பரப்ப வேண்டாம். உண்மையான பிரச்சினைகள் குறித்து பேசுங்கள்” என அவர் தெரிவித்திருப்பது தற்போது வைரலாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading