என் பெற்றோரின் மரியாதை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது- நடிகை அக்ஷரா ஹாசன்!

கமல்ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன் நடித்துள்ள ‘சிமுலேக்ரா’ (Simulacra) திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தப் படத்தை முன்னிட்டு அளித்த பேட்டியில், குடும்பம், சுதந்திரம் மற்றும் கலைப் பாரம்பரியம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். வீட்டுக்குள் ஒரு உலகமும், வெளியுலகம் முற்றிலும் வேறு உலகமும் என்பதை தனது பெற்றோர் சிறு வயதிலிருந்தே புரிய வைத்ததாக அக்ஷரா கூறினார். வீட்டில் தங்களாக இருக்கவும், சுயமாக சிந்திக்கவும் முழு சுதந்திரம் கிடைத்ததாகவும், அதே நேரத்தில் வெளி உலகின் சவால்களை புரிந்துகொள்ளும் பொறுப்புணர்வும் வளர்த்ததாகவும் தெரிவித்தார்.

தனக்கும் தனது சகோதரி ஸ்ருதி ஹாசனுக்கும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து சிறந்த முயற்சியை கொடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் முக்கியமான பாடமாக இருந்ததாக அவர் கூறினார். என் பெற்றோர் தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உருவாக்கிய மரியாதை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், அந்த பாரம்பரியத்துக்குள் மட்டும் சிக்கிக் கொள்ளாமல், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரத்தையும் பெற்றோர் வழங்கியுள்ளதாக அக்ஷரா கூறினார். தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை மறக்காமல், தங்களுக்கு பிடித்த பாதையில் தன்னம்பிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதே குடும்பம் கற்றுக் கொடுத்த மிகப்பெரிய மதிப்பாக இருப்பதாக அவர் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading