கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘டோரதி’ தனது இதயத்தின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டுவிட்டதாகவும், அதேபோல் ரசிகர்களின் மனதிலும் தனக்கு ஒரு இடம் கிடைத்திருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன் மீது நம்பிக்கை வைத்து, தனது தொலைநோக்குப் பார்வையில் தன்னை இணைத்துக்கொண்டதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்துள்ள கீர்த்தி, அவரது கனவுப் படத்தில் இடம்பெற்றிருப்பதை தனது கனவு போலவே உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
