சந்தீப் கிஷனின் புதிய பான் இந்திய படமான ‘கரிகாலா’

‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற சந்தீப் கிஷன், தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ‘மைக்கேல்’ எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோதிலும், தெலுங்கு மார்க்கெட்டில் அவர் இன்னும் வலுவான இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தில் நடித்துள்ள அவர், அடுத்ததாக புதிய பான் இந்திய திட்டத்தில் இணைந்துள்ளார்.

இயக்குநர் உகந்தர் முனி இயக்கும் புதிய படத்திற்கு ‘கரிகாலா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மாயக் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் 2027 ஜூலை 2-ம் தேதி, இரண்டாம் பாகம் 2027 அக்டோபர் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading