விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. விஷாலே கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முதலில் இயக்குநர் ரவி அரசு இந்தப் படத்தை இயக்கி வந்த நிலையில், படப்பிடிப்பு பாதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இயக்கும் பொறுப்பை விஷால் ஏற்று படத்தை முழுமையாக்கியுள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என முன்பே தகவல்கள் வந்திருந்தன. தற்போது அதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு, படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதே நாளில் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் நயன்தாரா-கவின் நடித்த ‘ஹாய்’ திரைப்படங்களும் வெளியாக இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading