‘மூடர் கூடம் 2’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2013-ம் ஆண்டு வெளியான ‘மூடர் கூடம்’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் கவனத்தை பெற்றது. நவீன் இயக்கி, தயாரித்து, நடித்த அந்த படத்தில் சென்ட்ராயன், ஓவியா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அதன் பின்னர் நவீன், ‘கொளஞ்சி’ படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதியதுடன் தயாரிப்பிலும் ஈடுபட்டார். பின்னர் விஜய் ஆண்டனியை வைத்து ‘அக்னிச் சிறகுகள்’ திரைப்படத்தை இயக்கியிருந்தாலும், அந்த படம் பல ஆண்டுகளாக வெளியீட்டை எதிர்நோக்கி வருகிறது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் ‘மூடர் கூடம் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொடர்ச்சி உருவாகுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராண்டல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சென்ட்ராயன், ஓவியா, ராஜ மாணிக்கம், சூரஜ் நல்லுசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தெலுங்கில் இந்த படம் ‘மிஷன் பாசிபிள்’ என்ற பெயரில் வெளியாகும் என்றும், அடுத்த அப்டேட் இன்று மாலை 5.55 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading