அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த சாய் பல்லவியை பார்த்த ரசிகர்கள், அவரை சூழ்ந்து கொண்டு “சீதையாக நடிப்பதற்கு வாழ்த்துக்கள்” என கூறினர். வருகிற தீபாவளி அன்று வெளியாக உள்ள ‘ராமராயணம்’ திரைப்படத்தில் சாய் பல்லவி சீதையாக நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading