‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார்.
படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உணர்வுகளும், மாஸ் அம்சங்களும் கலந்த கதையாக படம் உருவாகி வருகிறது.
இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி கவனிக்க, படத்தொகுப்பை நவின் நூலி மேற்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 14-ஆம் தேதி படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ஏற்கனவே வெளியான ‘தி வெட்டிங் சாங்’ மற்றும் ‘பட்டாம்பூச்சி’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. தற்போது படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகியுள்ளது.உற்சாகமான இசை, ஆற்றல்மிக்க வரிகள் மற்றும் சூர்யாவின் மாஸ் தோற்றம் காரணமாக இந்தப் பாடல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
