‘விஸ்வநாத் & சன்ஸ்’ பிறகு சூர்யா 47-வது படமும் 2026 இறுதிக்குள் வெளியாகிறதா?

‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படம், 2026 ஆம் ஆண்டில் சூர்யாவின் இரண்டாவது ரிலீஸாக இருக்கும். படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 47-வது படமும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்திய பேட்டியில், அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நஸ்ரியா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள இந்த கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading