மனிதநேயத்தையே பெருமையாகக் கொள்ளுங்கள் – நடிகை மீனாவின் பதிவு வைரல்!

சமூக வலைதளங்களில் நடிகை மீனா பகிர்ந்துள்ள ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சாதி, மதம், பிறப்பு போன்ற அடையாளங்களை விட மனிதநேயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது பதிவில், “சாதி, மதம், பிறந்த இடம், பாலினம் ஆகியவை நாம் தேர்வு செய்தவை அல்ல. பிறப்பால் கிடைத்தவை. அதனால் அவற்றை நினைத்து பெருமைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக குணநலன், செயல்கள் மற்றும் மனிதநேயத்தை நினைத்து பெருமைப்படுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் அவரது கருத்தை பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனா, பின்னர் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், நீண்ட காலமாக ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருகிறார்.

Add a Comment

Leave a Reply