பிரித்விராஜின் ‘கலிபா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள திரைத்துறையின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் தற்போது ‘கலிபா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வைசாக் இயக்கியுள்ளார்.

பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள நிலையில், கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய படப்பிடிப்பு கேரளா, லண்டன், துபாய், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. சர்வதேச அளவிலான காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘கலிபா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading