ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜீவா, தற்போது ‘தகப்பன்’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘சிவா மனசுல சக்தி’, ‘கற்றது தமிழ்’, ‘கோ’, ‘ரவுத்திரம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள அவர், சமீப காலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வருகிறார்.

இப்படத்தை ரா. வெங்கட் இயக்க, லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

வெளியான போஸ்டரில் ஜீவாவின் தோற்றம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. படத்தின் கதைக்களம் குறித்து இன்னும் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், தலைப்பே தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அன்பை குறித்த கதையாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading